வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

இன்றைய ராசிபலன் 05.02.2021

 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


*இன்று, இனிய வெள்ளிக்கிழமை  நந்நாளில், மஹா விஷ்ணு, மற்றும் சுக்ர பகவானை வழிபட்டு மேண்மை அடைவோம்.*


*🕉️சுக்ர காயத்ரீ:⚛️*


*🕉️ஓம் தத் புருஷாய வித்மஹே! ஸ்வேத வர்ணாய தீமஹி!! தன்னோ சுக்ரப்ரஸோதயாத்!!! 🔯.*


💐💐💐💐💐💐💐💐💐💐


*🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉* . 


*பஞ்சாங்கம் ~ தை ~ 23* ~


*{05.02.2021}* 

*வெள்ளிக்கிழமை.*


*1.வருடம் ~ ஸார்வரி வருடம். { ஸார்வரி நாம சம்வத்ஸரம்}*


*2.அயனம் ~ உத்தராயணம்.*


*3.ருது ~ ஹேமந்த ருதௌ.*


*4.மாதம் ~ தை ( மகர மாஸம்).*


*5.பக்ஷம் ~  கிருஷ்ண பக்ஷம்.*


*6.திதி ~ அஷ்டமி காலை 11.42 AM. வரை. பிறகு நவமி .*

*ஸ்ரார்த்த திதி ~ நவமி .*


*7.நாள்  ~~  வெள்ளிக்கிழமை ~ {ப்ருஹு வாஸரம்}* ~~~~~~~          


*8.நக்ஷத்திரம் ~ விசாகம் இரவு 07.55 PM. வரை. பிறகு அனுஷம் .*


*யோகம் ~ சித்த  யோகம் .*


*கரணம் ~ கௌலவம் , தைதுலம் .*


*நல்ல நேரம் ~ காலை  09.30 AM ~ 10.30 AM & 04.30 PM ~ 05.30 PM.*


*ராகு காலம் ~  காலை 10.30 AM ~ 12.00 NOON.*


*எமகண்டம் ~ பிற்பகல் 03.00 ~  04.30  PM*.


*குளிகை ~ காலை 07.30 ~ 09.00 AM*. 


*சூரிய உதயம்  ~ காலை 06.36 AM*.


*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.11 PM.*


*சந்திராஷ்டமம் ~ ரேவதி , அஸ்வினி  .*


*சூலம் ~  மேற்கு.*                    

*பரிகாரம் ~ வெல்லம்* 


*இன்று -  .*🙏🙏                                                                                             

*🔯🕉SRI RAMAJEYAM🔯🕉*


*PANCHAANGAM*~

*THAI ~ 23 ~ (05.02.2021) FRIDAY*.


*1.YEAR ~ SAARAVARI VARUDAM {SAARVARI NAMA VATHSARAM}.*

*2.AYANAM  ~ UTHTHARAAYANAM*.

*3.RUTHU ~ HEMANTHTHA RUTHU.*

*4.MONTH ~ THAI.{ MAKARA  MAASAM}.*

*5.PAKSHAM ~ KRISHNA PAKSHAM.*

*6.THITHI ~ ASHTAMI UPTO 11.42 AM. AFTERWARDS NAVAMI.*

*SRAARTHTHA THITHI ~ NAVAMI.*

*7.DAY ~ FRIDAY( BRUHU VASARAM).*

*8.NAKSHATHRAM ~ VISAAGAM UPTO 07.55 PM. AFTERWARDS ANUSHAM .*   

*YOGAM ~ SIDHDHA  YOGAM.*

*KARANAM ~ KAULAVAM ,TAITULAM.*

*RAGU KALAM ~ 10.30 AM~12.00 NOON*.

*YEMAGANDAM ~03.00 ~ 04.30 PM*.

*KULIGAI  : 07.30 ~ 09.00 AM*.

*GOOD TIME ~ 09.30 AM ~ 10.30 AM   &  04.30 PM ~ 05.30  PM* . 

*SUN RISE   ~ 06.36 AM*.

*SUNSET ~ 06.11 PM*.

*CHANDRASHTAMAM ~   REVATHI, ASWINI.*

*SOOLAM  ~ WEST*.

*PARIGARAM*~ *JAGGERY.*

*TODAY ~ .*🙏                                 🙏🙏🙏


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


*⚪வெள்ளிக்கிழமை ஹோரை🌼*


காலை 🔔🔔


6-7.   சுக்கிரன்.💚  👈சுபம் ✅

 7-8. புதன்.     💚   👈சுபம்  ✅

 8-9. சந்திரன்.💚  👈சுபம்  ✅

 9-10. சனி..   ❤👈அசுபம் ❌

 10-11. குரு.     💚   👈சுபம்   ✅ 

 11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌


பிற்பகல் 🔔🔔


12-1.  சூரியன்.❤ 👈அசுபம் ❌

 1-2. சுக்கிரன்.💚  👈சுபம் ✅

 2-3. புதன்.     💚   👈சுபம்  ✅


மாலை 🔔🔔

 3-4. சந்திரன்.💚  👈சுபம்  ✅

 4-5. சனி..   ❤👈அசுபம் ❌

 5-6. குரு.     💚   👈சுபம்   ✅.

 6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌


 நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.


💐💐💐💐💐💐💐💐💐💐


⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️


எட்டு பேறுகள் அருளும் எட்டு பைரவர்கள்


பிளாஞ்சேரி தலத்தில் ஸ்ரீசரப சூலினிக்குக் காவலாக எட்டு பைரவர்கள் தனித் தனிச் சன்னதிகளில் காட்சி தருகிறார்கள். இவர்களை வழிபட்டால், எட்டுவிதமான பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை


சிவபெருமானின் திருவடிவங்களில் ஒன்று ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இரண்யகசிபுவை வதைத்த நரசிம்ம மூர்த்தியின் ஆக்ரோஷத்தைத் தணிக்க, சிவபெருமான் எடுத்த திருவடிவே ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இந்த மூர்த்தியின் வலப்புற இறக்கையில் இருந்து தோன்றியவளே ஸ்ரீசரப சூலினி.


பிளாஞ்சேரி தலத்தில் ஸ்ரீசரப சூலினிக்குக் காவலாக எட்டு பைரவர்கள் தனித் தனிச் சன்னதிகளில் காட்சி தருகிறார்கள். ``சரபசூலினிக்கு மட்டுமல்ல, இங்கு வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கும் காவலாக இருந்து அருள்பாலிக்கிறார்கள் இந்த அஷ்ட பைரவர்கள்’’ என்று சிலிர்ப்போடு பகிர்ந்துகொள்கிறார்கள் பக்தர்கள். இவர்கள் எண்மரையும் வழிபட்டால், எட்டுவிதமான பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


அசிதாங்க பைரவர்: அன்ன வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் இவர், நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி நடைபெறும் அன்பர்களும் ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். இவரை வழிபட்டால் கல்வி, கலை, செல்வம், பேச்சாற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம். கலைத் துறையினர் இவரை வழிபட்டால் மகத்தான வெற்றிகளைப் பெறலாம்.


குரு பைரவர்: ரிஷப வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். சூரிய திசை, சூரிய புக்தி நடைபெறும் ஜாதகர்களும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். பித்ரு தோஷங்கள் நீங்கவும், திருமணத் தடைகள் விலகவும், கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் நீங்கிக் குடும்ப ஒற்றுமை ஏற்படவும் இவரை வழிபட வேண்டும்.


சண்ட பைரவர்: மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி நடைபெறும் ஜாதகர்களும் அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர். காரியத் தடைகள் அகலவும், துன்பங்கள் நீங்கவும், ரத்தம் சம்பந்தமான வியாதிகளில் இருந்து விடுபடவும் இவரை வழிபடுவது, விசேஷம்.


குரோதன பைரவர்: கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். புதன் திசை, புதன் புக்தி நடைபெறும் ஜாதகர்களும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். கடன்தொல்லை தீரவும், செல்வம் பெருகவும், தோல் வியாதிகள் விலகவும் இவரை வழிபடவேண்டும்.


உன்மத்த பைரவர்: குதிரை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். கேது திசை, கேது புக்தி நடைபெறும் ஜாதகர்களும் அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். சகலவிதமான திருஷ்டி தோஷங்கள் நீங்கவும், ஏவல், பில்லி-சூன்யம் போன்ற தீவினைகள் விலகவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறவும் இவரை வழிபடவேண்டும்.


கபால பைரவர்: யானை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களுடன் திகழ்பவர். சுக்கிர திசை, சுக்கிர புக்தி நடைபெறும் ஜாதகர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய மூர்த்தி இவர். இவரை வழிபட்டால் ஜனவசியம், ஆட்சி-அதிகாரம், அரசியலில் உயர் பதவிகள் ஆகியவை வாய்க்கும்.


பீஷண பைரவர்: சிம்ம வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். குரு திசை, குரு புக்தி நடைபெறும் ஜாதகர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், இதயம் தொடர்பான பிணிகள், பக்கவாதம் ஆகியவை விலகவும் இவரை வழிபடவேண்டும்.


சம்ஹார பைரவர்: நாய் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். பத்து திருக்கரங்களைக் கொண்டவர். சனி திசை-சனி புக்தி மற்றும் ராகு திசை-ராகு புத்தி நடைபெறும் ஜாதகர்களும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய பைரவர் இவர். சத்ரு உபாதைகள் நீங்கவும், கண்டங்களிலிருந்து தப்பிக்கவும், விபத்துகளில் சிக்காதிருக்கவும், வாக்குப் பலிதம் வாய்க்கவும் இவரை வழிபட்டு பலன் பெறலாம்.

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️


⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️


ஜோதிடம்


*எந்த ஒரு மனிதனும் முதலில் தன் ஜாதக கிரக தோஷத்தை போக்கிகொள்ளவேண்டும்,எப்படி?*


ஆரம்பகாலங்களில் ஒருகுழந்தை பிறந்தவுடன் ஒருவருடம் ஆனவுடன்,அந்த குழந்தையின் ஜாதகத்தை எழுதி, அதன் பின் அந்த ஜோதிடரைபார்த்து தட்சிணைகொடுத்து அவர்கள் கூறும் கோவிலுக்கு சென்று அந்த குழந்தை இராசி,நட்சத்திர,இலக்கின தெய்வங்களை வணங்கி  ஜன்ம தோஷத்தை போக்குவார்கள்,


இவ்வாறு பனிரெண்டு ஆண்டுகள் ஒவ்வொரு இராசிதோஷத்தை நீக்கி அந்த குழந்தையின் ஜாதக கிரகதோஷத்தை போக்குவார்கள்,


இன்று அது நம்மிடம் பலருக்கு கிடையாது,பரவாயில்லை,


நாம் ஜன்மராசியில் சூரியன் வரும் மாதம் நம் இராசி நட்சத்திரை போக்கிகொள்வோம்,


அதுபோல் ஜன்மராசிக்கு இரண்டாவது இராசியில் சூரியன் வரும் போது இரண்டாவது இராசி நட்சத்திர அதிபதிகளை வணங்கி நமது தனகுற்றம் கிரகங்களால் ஏற்படமால் இருக்க பிராத்தனை செய்து கொள்வோம்,


இவ்வாறு பனிரெண்டு மாதங்கள் அந்தந்த இராசி நட்சத்திர தெய்வங்களை வணங்க ,நமக்கு அடுத்த வருடம் நலமுடன் செல்லும் வாழ்வுசிறக்கும்,


வாழ்க வளமுடன் வையகம் சிறக்க

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


*🕉️ராசி பலன்கள்*


*🗓️05-02-2021⏳*


*🌼வெள்ளிக்கிழமை🌼*


*🕉️மேஷம்*


பிப்ரவரி 05, 2021


தை 23 - வெள்ளி


செய்யும் செயல்களில் கவனம் வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மெத்தன போக்கு இன்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும். எதிர்பாராத செய்திகளின் மூலம் சேமிப்புகள் குறையும். வாடிக்கையாளர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் சிறு சிறு வாக்குவாதங்கள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


அஸ்வினி : பொறுமை வேண்டும்.


பரணி : சேமிப்புகள் குறையும்.


கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------

*🕉️ரிஷபம்*


பிப்ரவரி 05, 2021


தை 23 - வெள்ளி


மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்களும், லாபமும் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் செய்யும் மாற்றங்களின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நபர்களை சந்திப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். அலுவலகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


கிருத்திகை : காரியங்கள் நிறைவேறும்.


ரோகிணி : ஆதாயம் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.

---------------------------------------

*🕉️மிதுனம்*


பிப்ரவரி 05, 2021


தை 23 - வெள்ளி


சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சலுக்கு பின்பு ஆதாயம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய கண்ணோட்டம் மாறுபடும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : மாற்றங்கள் உண்டாகும்.


புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------

*🕉️கடகம்*


பிப்ரவரி 05, 2021


தை 23 - வெள்ளி


குடும்ப உறுப்பினர்களுக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் உடனிருப்பவர்களுடன் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்


புனர்பூசம் : ஒற்றுமை மேம்படும்.


பூசம் : நன்மை உண்டாகும்.


ஆயில்யம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------

*🕉️சிம்மம்*


பிப்ரவரி 05, 2021


தை 23 - வெள்ளி


பிள்ளைகளின் செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத்துணைவர் வழியில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். வாகனத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


மகம் : மாற்றங்கள் உண்டாகும்.


பூரம் : இன்னல்கள் குறையும்.


உத்திரம் : பயணங்கள் சாதகமாகும்.

---------------------------------------

*🕉️கன்னி*


பிப்ரவரி 05, 2021


தை 23 - வெள்ளி


வியாபாரம் தொடர்பான பணிகளில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் நீங்கி விரைந்து செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்களும், அதை செயல்படுத்துவதற்கான முயற்சிகளும் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.


அஸ்தம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.


சித்திரை : முயற்சிகள் மேம்படும்.

---------------------------------------

*🕉️துலாம்*


பிப்ரவரி 05, 2021


தை 23 - வெள்ளி


உத்தியோகம் தொடர்பான பணிகளில் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை மேம்படும். செய்யும் முயற்சிகளின் மூலம் மனதில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை


சித்திரை : தைரியம் உண்டாகும்.


சுவாதி : மனம் மகிழ்வீர்கள்.


விசாகம் : திருப்தியான நாள்.

---------------------------------------

*🕉️விருச்சகம்*


பிப்ரவரி 05, 2021


தை 23 - வெள்ளி


பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். அதிகார பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய திட்டங்களை தீட்டி அதை நடைமுறைப்படுத்துவதற்கான எண்ணங்கள் மேம்படும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பயணங்களை மேற்கொண்டு மனம் மகிழ்வீர்கள். சிறு தொழில் தொடர்பான எண்ணங்களும், ஆலோசனைகளும் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.


அனுஷம் : எண்ணங்கள் மேம்படும்.


கேட்டை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------

*🕉️தனுசு*


பிப்ரவரி 05, 2021


தை 23 - வெள்ளி


கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளை பற்றி புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொருள் வரவு அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் தோன்றும். உறவினர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு


மூலம் : வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.


பூராடம் : பொருள் வரவு அதிகரிக்கும்.


உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------

*🕉️மகரம்*


பிப்ரவரி 05, 2021


தை 23 - வெள்ளி


எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை மனதில் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். வீட்டினை சரி செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் தலைமை அதிகாரிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


உத்திராடம் : தன்னம்பிக்கை உண்டாகும்.


திருவோணம் : அனுகூலமான நாள்.


அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------

*🕉️கும்பம்*


பிப்ரவரி 05, 2021


தை 23 - வெள்ளி


எதிர்பார்த்த தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வேலையாட்களை மாற்றுவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளியூர் தொடர்பான தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். முதலீடுகள் சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சங்கம் மற்றும் குழு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்


அவிட்டம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூரட்டாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------

*🕉️மீனம்*


பிப்ரவரி 05, 2021


தை 23 - வெள்ளி


வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எண்ணங்களில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகள் கைகூடும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை


பூரட்டாதி : புத்துணர்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.


ரேவதி : மகிழ்ச்சி உண்டாகும்.

---------------------------------------

💐💐💐💐💐💐💐💐💐💐

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக