திங்கள், 1 பிப்ரவரி, 2021

ஜாதக பாவங்களும் பலன்களும், புத்திர ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்தி ஸ்தானம், ராஜ்ஜிய ஸ்தானம்

ஐந்தாம் பாவம்

வணக்கம் நேயர்களே!

நாம் இப்போது பார்க்க போவது லக்னத்தில் இருந்து ஐந்தாம் பாவம் என சொல்லப்படக்கூடிய ஐந்தாம் வீடு பற்றி பார்க்க போகிறோம்.

இந்த பாவம் 120ஆவது டிகிரியில் இருந்து 150ஆவது டிகிரி வரைக்கும் உள்ள இடமாகும். லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடம் ஆகும்.

இந்த இடத்தை புத்திர ஸ்தானம் என்றும், பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும், புத்தி ஸ்தானம் என்றும், ராஜ்ஜிய ஸ்தானம் என்றும் சொல்வார்கள்…

இந்த பாவம் மனத்தெளிவு, புத்திக்கூர்மை, நெறி விசயம், கர்ப்ப உற்பத்தி, ஒரு விசயத்தை தீர்மானம் எடுக்கும் தன்மை, கலைஞானம், உடையின் லட்சனம், புரியும் சாதனைகள், இரகசியங்கள், தீர்க்க தரிசனம், நண்பர்கள், உயர் கல்வி, வயிறு அதாவது ஜீரனம், மதம், திருப்தியடையும் குணம், உள்முகப்பார்வை, புகழ், கீர்த்தி, குழந்தைகள் பற்றிய விபரம் ஆகியவற்றை விளக்குறது.

இந்த இடம் ஆனந்தம், ஆபத்து, அன்பு முதலியனவையும் குறிக்கும்,  சூதாட்டம், லாட்டரி, ரேஸ் போன்றவைகளில் வரும் வருமானத்தையும் எடுத்துரைக்கும்.

கலை உற்பத்தி இந்த இடத்தில்தான் தோன்றுகிறது.

இந்த பாவாதிபதி வலுப்பெற்று காணப்பட்டால் இந்தபாவம் அதிக நன்மைகள் பெறும், இந்த பாவாதிபதி வலு இழந்து காணப்பட்டால் பலன் குறைந்து விடுகிறது.

இந்த பாவத்தில் சுப கிரகங்கள் இருந்தால் இந்த பாவம் விருத்தியடைகிறது. அதே மாதிரி சுப கிரக பார்வை பட்டாலும் விருத்தியடைகிறது.

பாவ கிரகங்கள் நின்றாலும் பார்த்தாலும் இந்த பாவபலன் குறைந்து விடும்.

மேற்கூறியவைகள் ஒருவரது ஜாதகத்தில் 5ம் பாவத்தின் செயல்பாடுகளாகும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக