புதன், 3 பிப்ரவரி, 2021

ஜாதக பாவங்களும் பலன்களும், ஆறாம் பாவம், குண ஸ்தானம், ரோக ஸ்தானம், சத்ருஸ்தானம் | Astro Sivakumar

 

வணக்கம் நேயர்களே!

நாம் இப்போது பார்க்க போவது லக்னத்தில் இருந்து ஆறாம் பாவம் என சொல்லப்படக்கூடிய சத்துரு பாவம் பற்றி பார்க்க போகிறோம்.

இந்த இடம் லக்கினத்தில் இருந்து ஆறாவது வீடாகும். அதாவது 150 டிகிரி முதல் 180ஆவது டிகிரி வரையில் இருக்கும் இடமாகும்.

இந்த பாவத்தை ரோக பாவம், சத்துருபாவம், குணபாவம் என கூறுவார்கள்

இந்த பாவத்தை கொண்டு கடன், நோய்கள், இடைஞ்சல்கள், போராட்டம், தாய்மாமன் உடலில் ஏற்படும் சிறு வீக்கம், குரூரத்தன்மை, புத்தி சுவாதினமின்மை, கட்டிகள், வாழ்வில் ஏற்படும் துன்பங்கள், சகிப்புத்தன்மை,  உடல் உஷ்னம், துன்பம், கண் நோய், பிச்சை எடுத்தல், நேரம் தவறிய உணவு, உறவினரால் தொல்லை, அசதி, விஷம், உடல் வெலவெலத்தல், மூத்திரப்பை கோளாறு, திருடு, சிறை செல்லுதல், அடிமைத்தொழில், மருத்துவ மனையில் வேலை, கடினமான உழைப்பு, பிறருடன் சேர்ந்து கஷ்டப்படல், ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.

இந்த இடம் அரசியல் வாதிகளுக்கு மிக முக்கியமான இடமாகும்.

சமூக சீர்திருத்தம், மத சம்பந்தமான சீர்திருத்தம் ஆகியவற்றிக்கு இந்த வீடு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

இந்த பாவாதிபதி வலுவுடன் இருந்தால் மேற்கூறிய பலன்கள் குறைந்து காணப்படும்

இந்த வீட்டில் சுபகிரகங்கள் நின்றால் இந்த கெடுபலன்கள் அதிகரித்து காணப்படும். பாபகிரகங்கள் நின்றால் கெடுபலன்கள் குறைவாக இருக்கும்.

 

 

 

மேற்கூறியவைகள் ஒருவரது ஜாதகத்தில் 6ம் பாவத்தின் செயல்பாடுகளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக