ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

இன்றைய ராசிபலன் 07.02.2021

🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
*இன்று, ஸ்மார்த்த ஏகாதசி விரதத்துடன் கூடிய இனிய ஞாயிறில் மஹா விஷ்ணு அருளோடு இனிய காலை வணக்கம்.*
*இன்றைய தினம் மஹா விஷ்ணு வழிபாட்டுடன், ஸூர்ய வழிபாடும் செய்து மேன்மை அடைவாேம்.*
*🟠ஓம் ஆதித்யாய வித்மஹே! பாஸ்கராய தீமஹி!! தன்னோ மார்தண்டப்ரஸோதயாத்!!!🟠*
*🔯தினமும் பஞ்சாங்கம் ஏன் வாசிக்க வேண்டும்?*
*🕉️1) திதி- திதியைச் சொன்னால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.*
*🕉️2) வாரம்-வாரத்தைச் சொன்னால் ஆயுள் வளரும்.*
*🕉️3)நக்ஷத்திரம்-நக்ஷத்திரத்தைச் சொன்னால் பாபம் நீங்கும்.*
*🕉️4)யோகம்-யோகத்தைச் சொன்னால் ரோகம் (வியாதி) நீங்கும்.*
*🕉️5)கரணம்-கரணத்தைச் சொன்னால் காரியம் சித்தியாகும்.*
💐💐💐💐💐💐💐💐💐💐
*🔯🕉ஶ்ரீராமஜெயம்🔯🕉*.
*பஞ்சாங்கம் ~ தை ~ 25* ~
*{07.02.2021.}*
*ஞாயிற்றுக்கிழமை*.
*1.வருடம் ~ ஸார்வரி வருடம். (ஸார்வரி நாம சம்வத்ஸரம்}.*
*2.அயனம் ~ உத்தராயணம் .*
*3.ருது ~ ஹேமந்த ருதௌ.*
*4.மாதம் ~ தை ( மகர மாஸம்)*.
*5.பக்ஷம்*~ *கிருஷ்ண பக்ஷம்.*
*6.திதி ~ தசமி காலை 07.13 AM. வரை. பிறகு ஏகாதசி.*
*ஸ்ரார்த்த திதி ~ ஏகாதசி .*
*7.நாள் ~ ஞாயிற்றுக்கிழமை { பாநு வாஸரம் }* ~~~~~~~
*8.நக்ஷத்திரம் ~ கேட்டை மாலை 04.59 PM . வரை. பிறகு மூலம் .*
*யோகம் ~ மாலை 04.59 PM. வரை யோகம் சரி இல்லை. பிறகு அமிர்த யோகம் .*
*கரணம் ~ பவம், பாலவம் .*
*நல்ல நேரம் ~ காலை 07.30 AM ~ 08.30 AM & 03.30 PM ~ 04.30 PM.*
*ராகு காலம் ~ மாலை 04.30 PM ~ 06.00 PM.*
*எமகண்டம் ~ பகல் 12.00 PM ~ 01.30 PM.*
*குளிகை ~ பிற்பகல் 03.00 PM ~ 04.30 PM.*
*சூரிய உதயம் ~ காலை 06.35 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.12 PM.*
*சந்திராஷ்டமம் ~ பரணி, கார்த்திகை .*
*சூலம் ~ மேற்கு*
*பரிகாரம் ~ வெல்லம்.*
*இன்று ~ ஸ்மார்த்த ஏகாதசி விரதம் .*🙏🙏
*🔯🕉️SRI RAMAJEYAM🔯🕉️*
*PANCHAANGAM* ~ *THAI ~ 25 ~ (07.02.2021) SUNDAY*
*1.YEAR ~ SAARVARI VARUDAM { SAARVARI NAMA SAMVATHSARAM}*
*2.AYANAM ~ UTHTHARAAYANAM .*
*3.RUTHU ~ HEMANTHTHA RUTHU.*
*4.MONTH ~ THAI { MAKARA MAASAM}*
*5.PAKSHAM ~ KRISHNA PAKASHAM*.
*6.THITHI ~ THASAMI UPTO 07.13 AM. AFTERWARDS EKADHASI*
*SRAARTHTHA THITHI ~ EKADHASI.*
*7.DAY ~ SUNDAY( BHANU VAASARAM).*
*8.NAKSHATHRAM ~ KETTAI UPTO 04.59 PM. AFTERWARDS MOOLAM .*
*YOGAM ~ NOT GOOD UPTO 04.59 PM. AFTERWARDS AMIRDHA YOGAM*
*KARANAM ~ BHAVAM, BAALAVAM*
*RAGU KALAM .~ 04.30 PM ~06.00 PM.*
*YEMAGANDAM ~ 12.00 PM ~ 01.30 PM.*
*KULIGAI ~ 03.00 PM ~ 04.30 PM*.
*GOOD TIME ~ 07.30 AM TO 08.30 AM & 03.30 PM ~ 04.30 PM.*
*SUN RISE ~ 06.35 AM*.
*SUN SET~ 06.12 PM.*
*CHANDRAASHTAMAM ~ BHARANI, KAARTHIGAI. SOOLAM ~ WEST* .
*PARIGARAM ~ JAGGERY*.
*TODAY ~ SMAARTHA EKADHASI UPAVAS*.🙏🙏🙏 🙏
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
*🔯ஏகாதசி தினங்களின் ஏற்றமிகு சிறப்புகள்!*
*🔔7/2/2021🔔*
*🔯ஏகாதசி என்பது ஒவ்வொரு பக்தருக்கும் ஏகாந்த தினமாகவே உள்ளது.*
மோட்சத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருப்பதுதான் ஏகாதசி.
அமாவாசை, பவுர்ணமிக்கு அடுத்த 11 நாட்களில் ஒரு ஏகாதசி என்ற கணக்கில் ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.
ஆண்டு முழுவதும் வரும் ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், அந்தந்த ஏகாதசி தினங்களில் மேற்கொள்ளும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் நன்மை பயக்கும் பலன்களும் பலவாறு வகுத்து கூறப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்குவதோடு, வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே மிகச் சிறப்பானது.
* சித்திரை மாத வளர்பிறையில் ஏகாதசி, ‘காமதா ஏகாதசி’ என்றும், தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘பாப மோகினி ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்த இரு ஏகாதசியிலும் விரதம் இருப்பவர்களுக்கு, அவர்கள் விரும்பிய அனைத்து பேறுகளும் கிடைக்கப் பெறும்.
* வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி, ‘மோகினி ஏகாதசி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘வருதித் ஏகாதசி’ என்றும் கூறப்படுகின்றன.
இந்த ஏகாதசி காலங்களில் விரதம் இருப்பவர்கள் அனைவரும், இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசனம் செய்து வந்த பலனைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
* ஆனி மாத வளர்பிறை ஏகாதசி ‘நிர்ஜலா ஏகாதசி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘அபரா ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஏகாதசிகளில் விரதம் மேற்கொள்பவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.
* ஆடி மாத வளர்பிறை ஏகாதசி ‘சயனி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘யோகினி’ என்றும் பெயர்பெற்றுள்ளன.
(பக்தி Whatsapp Telegram 9442705560)
இந்த ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு அன்னதானம் வழங்கியதற்கு நிகரான பலன்கள் கிடைக்கப்பெறும்.
* ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி - ‘புத்ரஜா’; தேய்பிறை ஏகாதசி - ‘காமிகா’. இந்த தினங்களில் விரதம் இருந்தால் மக்கட்பேறு கிடைக்கப்பெறுவார்கள்.
* புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி, ‘பத்மநாபா’; மற்றும் தேய்பிறை ஏகாதசி ‘அஜா’ ஆகும். இந்நாட்களில் விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை வளரும்.
* ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி ‘பாபாங்குசா’; தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா’. இந்த ஏகாதசி நாட்களில் விரதம் இருப்பதால், வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும், நிம்மதி நிலைக்கும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.
* கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி, ‘பிரபோதின’ எனப்படும். இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலன் உண்டு. தேய்பிறை ஏகாதசியான, ‘ரமா’ தினத்தில் இறைவனுக்கு பழங்களை நைவேத்தியம் செய்தால் மங்கள வாழ்வு கிடைக்கும்.
* மார்கழி மாத ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி‘ என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இது மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி தனிச்சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ‘உத்பத்தி’ ஏகாதசி எனப்படுகிறது. பரமபதம் கிடைக்கச் செய்யும் அற்புத நாட்கள் இவை.
* தை மாத வளர்பிறை ஏகாதசி ‘புத்ரதா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘சுபலா’ என்றும் பெயர் பெறும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம், ஒளிமயமான வாழ்வு அமையும்.
* மாசி மாத வளர்பிறை ஏகாதசி ‘ஜெயா’ என்றும், தேய்பிறை ஏகாதசி ‘ஷட்திலா’ என்றும் அழைக்கப்படும். இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பவர்கள், மூதாதையர்கள் முக்தியடைய வழி செய்வார்கள்.
* பங்குனி தேய்பிறை ஏகாதசி ‘விஜயா’ எனப்படும். இந்த நாளில் ஏழு வகையான தானியங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கு முறையில் கலசத்தில் வைத்து மஹாவிஷ்ணுவை பிரார்த்தித்தால் கடல் கடந்து சென்று வெற்றி பெறலாம். வளர்பிறை ஏகாதசி ‘ஆமலகி’ எனப்படும். இன்று விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் பசுதானம் செய்த பலன் கிடைக்கும்.
* ஒரு ஆண்டில் கூடுதலாக வரும் ஏகாதசி ‘கமலா ஏகாதசி’ எனப்படும். அன்று மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
*🚩💫 🕉 தின காயத்ரி 🕉💫🚩*
*💫07/02/2021ஞாயிற்றுக்கிழமை*
*🔔விநாயகர் காயத்ரி*
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்
*🔔காயத்ரி மந்திரம்*
ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!
*🔯இன்றைய கிழமை காயத்திரி*
*🔔ஆதித்யன் (சூரியன்)*
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
*🔯இன்றைய பக்திதிதி நித்யா காயத்திரி.*
*🔔5வஹ்னி வாஸினி(ஏகாதசி)*
(07:14am முதல்)
ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே
ஸித்திப்ரதாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்
*⚜பலன்கள்:* நோய் தீரும். பூரண உடல் நலத்துடன், உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க இயலும்
*🔯இன்றைய தின நட்சத்திரம்*
*🔔18.கேட்டை நட்சத்திரம் 😘
(04:59pm வரை)
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
*🔯நவகிரக மந்திரம்,*
ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குரு(ர்) சுக்ர சனைப்யச்ச ராஹவே கேதவே நமஹ:
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
*ஞாயிற்றுக்கிழமை ஹோரை*
காலை 🔔🔔
6-7. சூரியன்.❤ 👈அசுபம் ❌
7-8. சுக்கிரன்.💚 👈சுபம் ✔
8-9. புதன். 💚 👈சுபம் ✔
9-10. .சந்திரன்.💚 👈சுபம் ✔
10-11. சனி.. ❤👈அசுபம் ❌
11-12. குரு. 💚 👈சுபம் ✔
பிற்பகல் 🔔🔔
12-1. செவ்வா.❤ 👈அசுபம் ❌
1-2. சூரியன்.❤ 👈அசுபம் ❌
2-3. சுக்கிரன்.💚 👈சுபம் ✔
மாலை 🔔🔔
3-4. புதன். 💚 👈சுபம் ✔
4-5. சந்திரன்.💚 👈சுபம் ✔
5-6. சனி.. ❤👈அசுபம் ❌
6-7. குரு. 💚 👈சுபம் ✔
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..
💐💐💐💐💐💐💐💐💐
☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
*🕉️ராசி பலன்கள்*
*🗓️07-02-2021⏳*
*🌞ஞாயிற்றுக்கிழமை🌞*
*🕉️மேஷம்*
பிப்ரவரி 07, 2021
தை 25 - ஞாயிறு
செயல்பாடுகளில் ஏற்படும் மந்தத்தன்மையால் காலவிரயம் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. நண்பர்களிடம் அனுசரித்து செல்லவும். கால்நடைகளிடம் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்த பலனை அளிக்காது. ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : காலவிரயம் உண்டாகும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
*🕉️ரிஷபம்*
பிப்ரவரி 07, 2021
தை 25 - ஞாயிறு
பெரியோர்களின் ஆசிகளும், ஆலோசனைகளும் கிடைக்கும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். போட்டித்தேர்வுகளில் ஈடுபட்டு வெற்றியும், பாராட்டுகளும் பெறுவீர்கள். குடும்ப பொருளாதாரத்தில் இருந்துவந்த தடைகள் அகலும். பணியில் உயர் பதவிக்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.
ரோகிணி : கவலைகள் நீங்கும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
*🕉️மிதுனம்*
பிப்ரவரி 07, 2021
தை 25 - ஞாயிறு
சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தாயின் உடல்நலத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். அவசர முடிவுகளால் பிரச்சனைகள் ஏற்படலாம். செய்யும் பணியில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் அகலும். பணிபுரியும் இடங்களில் மற்றவர்களுடைய பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவாதிரை : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
புனர்பூசம் : எதிர்ப்புகள் அகலும்.
--------------------------------------
*🕉️கடகம்*
பிப்ரவரி 07, 2021
தை 25 - ஞாயிறு
புதிய முயற்சிகளால் பாராட்டுகளும், மதிப்புகளும் அதிகரிக்கும். இளைய சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்களில் தடையின்றி வெற்றி கிடைக்கும். வெளியூர் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கேளிக்கைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : வெற்றி கிடைக்கும்.
ஆயில்யம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
*🕉️சிம்மம்*
பிப்ரவரி 07, 2021
தை 25 - ஞாயிறு
பேச்சுத்திறமையால் லாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். உத்தியோகஸ்தர்கள் எடுத்த பணியை துரிதமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர்களிடம் அமைதியுடன் செயல்படவும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வீட்டின் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். செய்தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். தாய்மாமன் உறவுகளால் சாதகமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : உறவுகள் மேம்படும்.
பூரம் : அனுபவம் உண்டாகும்.
உத்திரம் : மேன்மையான நாள்.
---------------------------------------
*🕉️கன்னி*
பிப்ரவரி 07, 2021
தை 25 - ஞாயிறு
அரசாங்கம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர் அதிகாரிகளுடன் நட்பு உண்டாகும். மனதில் ஒருவிதமான பய உணர்வு ஏற்படும். தொழிலில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். மனதில் கற்பனைத்திறன் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அஸ்தம் : தீர்வு காண்பீர்கள்.
சித்திரை : கற்பனைத்திறன் மேம்படும்.
---------------------------------------
*🕉️துலாம்*
பிப்ரவரி 07, 2021
தை 25 - ஞாயிறு
செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் உயரும். விவசாயம் தொடர்பான செயல்பாடுகளில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். சிறுதொழில் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். பொதுக்கூட்ட பேச்சுக்களில் சாதகமான சூழல் ஏற்படும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : லாபம் உண்டாகும்.
சுவாதி : மதிப்புகள் உயரும்.
விசாகம் : முயற்சிகள் ஈடேறும்.
---------------------------------------
*🕉️விருச்சகம்*
பிப்ரவரி 07, 2021
தை 25 - ஞாயிறு
குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானம் வேண்டும். தர்க்க விவாதங்களில் வெற்றி கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.
அனுஷம் : நிதானம் வேண்டும்.
கேட்டை : தேடல்கள் உண்டாகும்.
---------------------------------------
*🕉️தனுசு*
பிப்ரவரி 07, 2021
தை 25 - ஞாயிறு
புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். தொழில் சம்பந்தமான பிரபலங்களின் அறிமுகம் உண்டாகும். சுபச்செலவுகள் ஏற்படும். பணிபுரியும் இடங்களில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். நிர்வாகம் சம்பந்தமான பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனமாக இருக்கவும். புதிய நபர்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆராய்ச்சி சம்பந்தமான தேடல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : சிந்தித்து செயல்படவும்.
பூராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
*🕉️மகரம்*
பிப்ரவரி 07, 2021
தை 25 - ஞாயிறு
எதிர்பாராத தனவரவுகளால் சேமிப்புகள் உயரும். புதிய அணிகலன்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான சூழல் அமையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகளில் காலதாமதம் உண்டாகும். செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். கெளரவ பதவிகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : சேமிப்புகள் உயரும்.
திருவோணம் : லாபம் உண்டாகும்.
அவிட்டம் : மாற்றங்கள் ஏற்படும்.
---------------------------------------
*🕉️கும்பம்*
பிப்ரவரி 07, 2021
தை 25 - ஞாயிறு
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான நிதி உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதில் அஞ்ஞான எண்ணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அரசாங்க செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அவிட்டம் : எண்ணங்கள் தோன்றும்.
சதயம் : அலைச்சல்கள் ஏற்படும்.
பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும்.
---------------------------------------
*🕉️மீனம்*
பிப்ரவரி 07, 2021
தை 25 - ஞாயிறு
கூட்டாளிகளுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உறவினர்களுக்கிடையே மதிப்புகள் அதிகரிக்கும். இணைய வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் புதுவிதமான உத்வேகத்துடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------
💐💐💐💐💐💐💐💐💐💐

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக