செவ்வாய், 26 ஜனவரி, 2021

ஜாதக பாவங்களும் பலன்களும், லக்ன பாவம்

 

மனிதன் பிறந்தது முதல் வாழ்க்கை  முடிவு வரை அனுபவித்து வரும் இன்ப துன்பங்கள், வாழும் சூழ்நிலை, செல்வ நிலை, அமையும் வாழ்க்கைத்துனை, குழந்தை செல்வங்கள், தொழில், நண்பர்கள் சேர்க்கை, குணாதிசயங்கள், உடல் தோற்றம், ஆகியன ஒருவரது ஜாதகத்தில் லக்னம் முதல் பன்னிரு பாவங்களில் அடங்கி இருக்கிறன.

இதில் ஒவ்வொரு பாவமும்  பல உட்பிரிவுகளை கொண்டது. இந்த பாவங்களில் நின்ற கிரககங்கள், தனது காரகத்தன்மையாலும், ஆதிபத்திய தன்மையாலும், தான் இருக்கும் ஸ்தான பலத்தாலும், தன்னுடன் சேரும் கிரக பலத்தாலும் ஜாதக பலனை ஏற்படுத்த வேண்டும்.

இதில் ஒவ்வொரு பாவத்திற்க்கும் என்ன பலன்கள் இருக்கும் என இப்போது பார்க்கலாம்.

முதல் பாவம்

இந்த பாவம் லக்னம் என சொல்வார்கள். பிறக்கும் நேரத்தை கணக்கிட்டு அந்த நேரத்தில் வந்த ராசியை குறிக்கும் இடம். இந்த பாவத்தின் மூலமாக உடல் தோற்றப்பொலிவு, தசை, லட்சனம், மகிழ்ச்சி, கஷ்டங்கள், அறிவு, வயோதிகம், புகழ், ஆரோக்கியம், பெருமை, வாழ்க்கைத்தரம், மதிப்பு, கெளரவம், சுகாதார நிலை, குனாதிசயம், போன்ற பலன்கள் லக்னத்தின் மூலம் அமைகிறது.,…

லக்னம் என்று சொல்லப்படுகிற இடத்தில் சுப கிரகங்கள் இருப்பின் மேற்குறிப்பிட்ட பலன்களின் நன்மைகள் அதிகரிக்கும். இந்த பாவத்திற்க்கு சுப கிரக பார்வை இருந்தாலும் மேலே கூறிய பலன்களின் நன்மைகள் அதிகரிக்கும்.

ஆனால் இந்த ராசிக்கு உடைய கிரகம் பகை அல்லது நீச்சம் அடைந்து இருந்தாலும் அல்லது அஸ்தங்கம் அடைந்தாலும், ஆறு எட்டு பன்னிரண்டு ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும் மேற்கூறிய பலன்களின் நன்மைகள் குறையும்.

லக்னத்தை பாவ கிரகங்கள் என கூறப்படும் ராகு, கேது, செவ்வாய், சனி, சூரியன் போன்ற கிரகங்கள் பார்த்தாலோ அல்லது லக்னத்தில் இத்தகைய கிரகங்கள் இருந்தாலும் மேற்கூறிய பலன்களில் நன்மைகள் குறையும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக