புதன், 16 டிசம்பர், 2020

சைபர் தாக்குதலின் வகைகள்

சைபர் தாக்குதல் (Hacking) என்பது ஒருவருடைய கணினி அல்லது மொபைல் சாதனமானது அவருடைய அனுமதி இன்றி மூன்றாவது நபர் ஒருவரால் முடக்கப்படுவது அல்லது தகவல்களை திருடுவது  ஆகும்.


இதில் முதன்மையானது முடக்கப்படுவது. அதற்காக பல சைபர் கிரிமினல்கள் பல வழிகளை பின்பற்றி சைபர் தாக்குதல்களை நடத்துகின்றனர்.

உலக அளவில் அதிகமாக நடத்தப்படும் சில சைபர் தாக்குதல்களை பற்றி தற்பொழுது பார்க்கலாம்.

1.Malware Attack

2.Phishing Attack

3.Ransomware Attack

4.Denial of service Attack

5.Man in the middle Attack

6.Cryptojacking Attack

7.SQL injection Attack

   இந்த தாக்குதல்கள் எல்லாம் அதிக அளவில் நடைபெறக்கூடிய சைபர் தாக்குதல்கள் ஆகும்.

Malware Attack 

மால்வேர் attack என்பது டெவலபரால் Coding மூலம் ஒரு program உருவாக்கப்பட்டு அதனைக் கொண்டு ஒருவருடைய கணினி அல்லது மற்ற சாதனங்களில் சைபர் தாக்குதல்களை உருவாக்குவது ஆகும்.

இந்த தாக்குதல்களை நடத்த Coding தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. Coding தெரிந்த ஒரு டெவலபரிடம் program செய்யப்பட்ட malware களை வாங்கியும், இந்த தாக்குதலை ஹேக்கர்கள் நிகழ்த்துகின்றனர்.


Phishing Attack

Phishing Attack என்பது ஒரு வலைத்தளம் அல்லது ஒரு இணையத்தின் ஏதோ ஒரு செயல்பாட்டை உள்ளபடியே Cloning முறையில் உருவாக்கி புதிதாக ஒன்றை உருவாக்கி அதன் மூலம் நம்மிடமிருந்து தகவல்களை பெறுவதாகும்.

இதன் மூலம் நாம் பல நேரங்களில் மிக எளிதாகக் கூட ஏமாற்றப்படலாம். சில மாதங்களுக்கு முன்னர் Pmcare இணையதளத்தைப் போலவே மற்றொரு போலியான இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் மக்களை ஏமாற்ற முயன்றது நம்மில் பலரும் அறிந்ததே.


Ransomware Attack

Ransomware  இது உலகளவில் அதிக நபர்களால் பாதிக்கப்பட்ட ஒரு சைபர் அட்டாக் ஆகும்.இந்த அட்டாக் ஒரு கணினிக்கு வைரஸ் அனுப்பப்பட்டு அதன் மூலம் ஒருவருடைய கணினியை முடக்குவதாகும்.

பிறகு பணம் கேட்டு மிரட்டி பணம் கொடுக்க வில்லை என்றால், கணினியில் உள்ள தகவல்களை திரும்பப் பெற முடியாது என்றும், கூறி பணம் பெற்று அதன் பின்னர் இந்த வைரசை  Decrypt செய்யு அதற்கான key-ஐயும் கொடுக்கின்றனர் இந்த ஹேக்கர்கள்.

 Denial of service Attack

 Dos அட்டாக் என்பது ஒரே நேரத்தில் பல கணினிகளைக் கொண்டு, குறிவைக்கும் இணைய தளத்திற்கு அனைத்தையும் Re-Direct செய்து இணையப் போக்குவரத்தை அதிகரிக்கச் செய்து அந்த சர்வரை Crash செய்வதாகும்.

இதில் பல ஆயிரக் கணக்கான கணினிகள் கூட ஒரே நேரத்தில் ஒரு ஹேக்கரின் மூலம் பயன்படுத்தப்படுத்தப்பட்டு குறிக்கோளுக்கு உள்ளாக்கும் கணினியானது முடக்கப்படுகின்றது.


Man in the middle Attack

  MITM அட்டாக் என்பது தனிப்பட மனிதர்கள் அல்லது சில வணிக நிறுவனங்களின் மீதான தகவல்களை பெறுவதற்கு ஏற்படுத்தபடும் ஒரு சைபர் தாக்குதல் ஆகும்.

  இதில் கடவுசோல்கள்,Credit கார்டு மற்றும் debit கார்டு password-கள் போன்றவை முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.


Cryptojacking Attack

இந்த தாக்குதலில் ஹேக்கர் பிறருடைய கணினிகளின் உதவி கொண்டு Cryptocurrency சம்பந்தமான பரிமாற்றங்களை மேற்கொள்வதாகும்.

இதில் ஹேக்கர் பெரும்பாலும் அடுத்தவருடைய கணினி கொண்டு தாக்குதலை நிகழ்த்துவதால் இதற்காக ஏற்படும் சிறு கட்டணங்கள் கூட  மற்ற பயனர்களின் மீது தான் திணிக்கப்படுகின்றது.


SQL injection Attack

இதிலும் கடவுசொற்கள்,Credit கார்டு மற்றும் debit கார்டு password-கள் போன்றவை முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.

ஆனால் இதில் சிறிதும் தாக்குதல் குறித்து மற்றவர்கள் மிக மிக தாமதமாகவே அறிய கூடும்.

இவையெல்லாம் அதிக அளவில் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெறகூடிய சைபர் தாக்குதல்கள் ஆகும். ஆனால் இவை ஒவ்வொன்றும் பல வழிமுறைகளைப் பயன்படுத்தி ஹெக்கர்களால் நிகழ்த்தப்படுகின்றது.

இந்த சைபர் தாக்குதல்கள் நடத்தப்படும் முறைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் அடுத்தடுத்த பகுதிகளில் முழுவதுமாக காணலாம்,.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக