திங்கள், 1 பிப்ரவரி, 2021

ஜாதக பாவங்களும் பலன்களும், நான்காம் பாவம், மாத்ரு ஸ்தானம், சுக ஸ்தானம், வித்யா ஸ்தானம்

 

நான்காம் பாவம்

வணக்கம் நேயர்களே!

நாம் இப்போது பார்க்க போவது லக்னத்தில் இருந்து நான்காம் பாவம் அல்லது மாத்ரு பாவம் என சொல்லப்படக்கூடிய நான்காம் வீடு பற்றி பார்க்க போகிறோம்.

இந்த பாவம் லக்னம் பாவம் முதல் நான்காவது இடமாகும்.

அதாவது லக்னத்தில் இருந்து 90 டிகிரி முதல் அடுத்து வரும் 30 டிகிரிகள் கொண்ட இடமாகும். இந்த பாவத்தை மாத்ரு ஸ்தானமென்றும் சுகஸ்தானமென்றும் வித்யாஸ்தானமென்றும் கூறுவார்கள்.

இந்த ஸ்தானம் தாயாரின் நிலை, கல்வி, மகிழ்ச்சி, நிலபுலன்கள், இல்லம், வாகன வசதி, உறவினர்கள், சிநேகிதர்கள், உடை, புகழ், நம்பிக்கை, பிறரிடம் குற்றம் காணல், தோட்டம் துரவுகள், சேமிப்பு, கலை ஆர்வம், கால் நடைகள், பிதுர்ரார்ஜித சொத்து, வசிக்கும் இடம் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும்.

வயிற்றில் உருவாகும் கருவிற்க்கும் இந்த இடம் காரகத்துவம் பெறுகிறது. ஒருவரின் ரகசியமான செயல்களையும் இந்த இடம் எடுத்துக்காட்டுகிறது.

இந்த பாவத்தில் சுப கிரகங்கள் இருந்தாலும், சுப கிரக பார்வை பட்டாலும் சொல்லிய பலன்கள் விருத்தியடையும்.

மாறாக பாவ கிரகங்கள் இருந்தாலும் பாவ கிரக பார்வை பட்டாலும் இந்த பாவபலன் விருத்தியடையாது. அது போலவே இந்த பாவாதிபதி வலுவிலந்து காணப்பட்டாலும் விருத்தியடையாது.

மேற்கூறியவைகள் ஒருவரது ஜாதகத்தில் நான்காம் பாவத்தின் செயல்பாடுகளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக