சனி, 30 ஜனவரி, 2021

ஜாதக பாவங்களும் பலன்களும், இரண்டாம் பாவம், தனஸ்தானம், வாக்குஸ்தானம், குடும்பஸ்தான்ம்

 

இரண்டாம் பாவம்

வணக்கம் நேயர்களே!

நாம் இப்போது பார்க்க போவது லக்னத்தில் இருந்து இரண்டாம் பாவம் அல்லது இரண்டாம் வீடு என சொல்லப்படக்கூடிய தன பாவம் பற்றி பார்க்க போகிறோம்.

இந்த வீடு தோராயமாக பிறந்த டிகிரி முதல் முப்பது டிகிரிகளுக்கு அடுத்த இடத்தை குறிப்பிடுவதாகும்.

இந்த இடத்தை தன ஸ்தானம் என்றும், குடும்ப ஸ்தானமென்றும், வாக்குஸ்தானம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பாவத்திலும் பல உட்பிரிவுகள் இருக்கிறன.

ஜாதகர் பேசக்கூடிய பேச்சின் தன்மை, மதம் சார்ந்த நம்பிக்கை, செல்வ நிலை, நகங்களைப்பற்றிய விபரம், வலது கண்ணை பற்றிய விபரம், மூக்கின் அமைப்பு, உண்மையும் – பொய்யும், நாக்கின் அமைப்பு, வைரம், முத்துக்கள், வியாபார கண்ணோட்டம், எடுக்கும் தீர்மானம், தாராள தன்மை, நண்பர் நேசம், செலவு, பெருந்தன்மை, நிபுனத்துவம், குடும்ப நிலை, வாழும் விதம், முக லட்சனம், சொத்து, படிப்பு, அடுத்தவர்களை பற்றிய சிந்தனை ஆகியவற்றை குறிக்கும் இடம் இதுவாகும்.

மேலும் நேர்வழியில் சம்பாதிக்கும் சொத்தும், வருமானமும் ஒருவர் மேல் ஏற்படும் அன்பையும் எடுத்துக்காட்டும்.

இந்த பாவாதிபதி வலுவுடன் இருந்தால் மேற்கூறிய பலன்கள் அதிகரித்து காணப்படும்.

இந்த பாவாதிபதி ஆறு, எட்டு, பன்னிரண்டாமிடங்களில் மறைந்திருந்தாலோ அல்லது அஸ்ந்தங்கம் அடைந்து இருந்தாலோ இந்த பாவ பலன் குறைந்து காணப்படும்.

இந்த பாவத்தில் சுபகிரகங்கள் இருந்தாலும் பார்த்தாலும் இந்த பாவம் விருத்தியடையும், பாவ கிரகங்கள் இருந்தாலும் பார்த்தாலும் பலன் அற்பமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக