சனி, 30 ஜனவரி, 2021

ஜாதக பாவங்களும் பலன்களும், மூன்றாம் பாவம், சகோதர ஸ்தானம், வெற்றி ஸ்தானம், தைரிய ஸ்தானம்

 

வணக்கம் நேயர்களே!

நாம் இப்போது பார்க்க போவது லக்னத்தில் இருந்து மூன்றாம் பாவம் அல்லது மூன்றாம் வீடு என சொல்லப்படக்கூடிய சகோதர பாவம் பற்றி பார்க்க போகிறோம்.

இந்த இடத்தை சகோதர ஸ்தானம் என்றும், வெற்றி ஸ்தானம் என்றும், தைரிய ஸ்தானம் என்றும் கூறுவது உண்டு.

இந்த பாவம் லக்னம் முதல் அறுபதாவது டிகிரியில் ஆரம்பித்து முப்பது டிகிரிகள் கொண்ட பாவமாகும்.

ஜாதகரின் சகோதர சகோதரிகள், தைரியம், வெற்றி, வலது காது, கால்கள், சலன புத்தி, வலிப்பு, மகிழ்ச்சி, உறவினர்கள், சிநேகிதர்கள், பயணங்கள், வெளியூர் செல்லுதல், தொண்டை, சொத்து, ஆபரனங்கள், கல்வி, கடந்தகால சிந்தனை, வளர்த்தி, பனியாட்கள், மதம் சார்ந்த பற்று, அண்டை அயலார், எழுதும் சக்தி அதாவது எழுத்து திறன், மூளையைப்பற்றிய விபரம், அவசர தகவல்கள் ஆகிய விபரங்களை இந்த பாவத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதில் தகவல்கள் என்பது மேடைப்பேச்சு, கடிதம் எழுதுவது, மொபைல் போனில் பேசுவது, பிரசங்கம் செய்வது, குற்றம் சாட்டுவது, கதை எழுதுவது போன்றவற்றை குறிக்கும்.

இந்த பாவத்தில் சில நல்ல பலன்களும், கூடவே கெடுபலன்களும்  சேர்ந்து இருப்பதால், இந்த பாவாதிபதி வலுப்பெற்று காணப்பட்டால் நன்மை தீமை இரண்டுமே கலந்து காணப்படும். இந்த பாவாதிபதி வலு இழந்து காணப்பட்டாலும் மறைந்தாலும் இரண்டு பலன்களுமே குறைந்துவிடும்.

இந்த பாவத்தில் சுப கிரகங்கள் இருப்பதை விட பாவ கிரகங்கள் இருப்பதே மேலானதாகும்.

சூரியன், செவ்வாய், ராகு, கேது, சனி ஆகிய கிரகங்கள் மூன்றாம் பாவத்தில் இருந்தால் நற்பலன்களை கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக